in

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம்

 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் 11-ம் திருநாளையொட்டி நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்…

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசித் திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது .

தொடர்ந்து 12-நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் கடந்த 12-ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து திருவிழாவின் 11-ம் திருளான நேற்று இரவு தெப்ப உற்றவம் நடைபெற்றது.

இதனையொட்டி கோவில் தெப்பக்குளத்தில் உள்ள நெல்லை நகரத்தார் மண்டபத்தில் வைத்து சுவாமி குமரவிடங்கபெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்பாளுடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் எழுந்தருளினர்.

 

தொடர்ந்து தேர் தெப்பகுளத்தில் 11 முறை சுற்றி வளம் வந்து சுவாமியும், அம்பாளும் பக்தர்களுக்கு அருட்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்..

What do you think?

கோனூர் ஸ்ரீ சித்தி விநாயகர் உள்ளிட்ட 5 பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம்

அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதியம்பாள் திருக்கோயிலில் அப்பர் தெப்பத் திருவிழா