பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழக வெற்றி கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து தேனி பங்களாமேட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக தெரிவித்து
“பாதுகாப்பில்லை பாதுகாப்பில்லை பெண்களுக்கு பாதுகாப்பில்லை” “அகற்றிடு அகற்றிடு 2026 தேர்தலில் திமுகவை அகற்றிடு” என்ற கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழக வெற்றி கழகத்தின் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் திமுக அரசுக்கு எதிராக வசனங்கள் இடம் பெற்ற பதாகையை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.