பாண்டமங்கலம் பெருமாள் ஆலயத்தில் தெலுங்கு வருடப்பிறப்பு பண்டிகை தினத்தை முன்னிட்டு திருவீதி உலா
நாமக்கல் அடுத்த பாண்டமங்கலம் பெருமாள் ஆலயத்தில் தெலுங்கு வருடப்பிறப்பு பண்டிகை தினத்தை முன்னிட்டு திருவீதி உலா
நாமக்கல், பரமத்தி வேலூர் வட்டம் பாண்டமங்கலம் அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஆலயத்தில் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு மூலவர் பெருமாளுக்கும் உற்சவர் பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது.
அப்போது பஞ்சாஞ்கம் வாசிக்கப்பட்ட பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவ பெருமான் பல்லாக்கில்எழுந்தருளி திருவீதி விழா புறப்பாடு நடைபெற்றது.
அப்பொழுது முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது வழி நெடுக பக்தர்கள் தேங்காய் உடைத்து பெருமாளை வழிபாடு செய்தனர்.