திருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனம் செய்த பிரபல திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே
பிரபல திரைப்பட கதாநாயகி பூஜா ஹெக்டே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு மற்றும் சேவையில் பங்கேற்றார்.
வெள்ளிக்கிழமை காலையில் சுப்ரபாத சேவை நடைபெற்ற போது, அவர் தனது குடும்பத்தினருடன் சுப்ரபாத சேவையில் பங்கேற்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தரிசனத்திற்குப் பிறகு, கோயிலின் ரங்கநாயக மண்டபத்தில் அர்ச்சகர்கள் அவருக்கு வேத ஆசீர்வாதம் செய்தனர். மேலும், கோயில் அதிகாரிகள் பட்டு வஸ்திரம் அணிவித்து தீர்த்த பிரசாதம்வழங்கி சிறப்பித்தனர்.
கோயிலை விட்டு வெளியேறும்போது, செய்தியார்களிடம் பேசிய பூஜா, சுவாமியின் ஆசீர்வாதத்தைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.
மேலும், தனது “ரெட்ரோ” திரைப்படம் வரும் மே மாதத்தில் வெளியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து வெளியே காத்திருந்த பக்தர்கள் பலர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.