500 ஆண்டுகள் பழமையான உக்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா. பக்தர்கள் கேபுர தரிசனம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே 66 ஆலங்குடி கொத்தட்டை கிராமத்தில் அருள்மிகு உக்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் கடந்த சில வருடங்களாக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடமுழுக்கு பணிகள் நடைபெற்றன.
பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி விக்னேஸ்வரர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று காலை இரண்டாம் கால பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் கிராமத்து நாட்டாமைகள் கிராமவாசிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு இளைஞர் நற்பணி மன்றம் கொத்தட்டை கிராம மக்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.