in

அழகிய மன்னாா் ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி பிரம்மோஸ்தவ 5ம் நாள் இரண்டு கருட சேவை

அழகிய மன்னாா் ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி பிரம்மோஸ்தவ 5ம் நாள் இரண்டு கருட சேவை

 

பாளையங்கோட்டை அருள்மிகு அழகிய மன்னாா் ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி பிரம்மோஸ்தவ 5ம் நாள் இரண்டு கருட சேவை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ ராஜகோபாலா் மற்றும் ஸ்ரீவேதநாராயணா் கருட வாகனத்தில் ஏழுந்தருளி வீதி உலா. ஏராளமான பக்தா்கள் தாிசனம்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சுமாா் 800 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அழகிய மன்னாா் இராஜகோபால சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத் திருக்கோவிலில் 3 மூலவா்கள் அருள்பாலிக்கின்றனா்.

அஷ்டாங்க விமானத்தின் கீழ் சுதைச் சிற்பமாக சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகிய மன்னாரும், மூலஸ்தானத்தில் வேதவல்லி குமுதவல்லி சமேத வேதநாராயணரும், உற்சவராக ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் என 3 நிலைகளில் பெருமாள் அருள்பாலிக்கின்றாா்.

சிறப்புகள் வாய்ந்த இத் திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்ச்சவம் வைகானச முறைப்படி கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீஇராஜகோபாலா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா கண்டருளினாா்.

5ம் திருநாளான இன்று காலையில் உற்சவா்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவில் உற்சவமூா்த்திகள் ஸ்ரீ ராஜகோபாலா் மற்றும் ஸ்ரீவேதநாராயணா் ஆகியோா் கருடவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுத்தாா்.

பக்தா்களின் கோவிந்தா கோபாலா கோஷங்களுடன் குடைவரை வாயில் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து இரண்டு கருடவாகனத்திற்கும் திருக்குடைகள் சாற்றப்பட்டு கற்பூர  ஆரத்தி காண்பிக்கப்பட்டதும் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.

பிரபந்தகோஷ்டியாா் பிரபந்தம் பாடிக்கொண்டு முன்செல்ல, பெண்கள் கோலாட்டம் அடிக்கவும் சிறுவா்கள் பெருமாள் வேடமிட்டபடி ஆடலுடன் பஜனை பாடல்கள் பாடினா். கலையரங்கில் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் இரண்டு கருடசேவையை வழிபட்டனா்.

விழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் வருகின்ற 12ம் தேதியும் நடைபெறுகின்றது. திருவிழா ஏற்பாடுகளை உபயதாரா்கள். திருக்கோயில் நிா்வாகத்தினா் மற்றும் பக்தர்கள் செய்கின்றனா்.

What do you think?

தனியார் கல்லூரியில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால் ஸ்ரீ சிவலோகநாத சுவாமி தேவஸ்தானத்தில் சூரிய பூஜை விழா