நாமக்கல் அருள்மிகு நரசிம்மர், ஆஞ்சநேயர், அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் பங்குனி தேர் திருவிழா
நாமக்கல் அருள்மிகு நரசிம்மர், ஆஞ்சநேயர், அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் பங்குனி தேர் திருவிழா ஆறாம் நாள் யானை வாகனத்தில் திருவீதி உலா
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருக்கோவில்கள் அமைந்துள்ளன. இக்குடவரைக் கோவில்களின் காலம் கி.பி., 8-ம் நூற்றாண்டு ஆகும். இக்கோவில்களின் எதிரே ஆஞ்சநேயர் திருக்கோவிலும் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
பங்குனி தேர்த் திருவிழா கொடியேற்றம் (04.04.2025) காலை நடைபெற்றது. 6 – ம் நாள் நிகழ்வாக புதன்கிழமை இரவுநரசிம்மர், அரங்கநாதர் யானை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் பின்னர் மஹா தீபம் காண்பிக்கப்பட்டது பிறகு திருவீதி உலா நாதஸ்வர மேலதாளத்துடன் நடைபெற்றது வழிநெடுக பக்தர்கள் தேங்காய் பழம் வைத்து வழிபடு செய்தனர்.
திருவிழா நாட்களில் தினந்தோறும், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் இருந்து காலை 8:00 மணி அளவில் அருள்மிகு நரசிம்ம சுவாமி, அரங்கநாதர் சுவாமி ஆகியோர் எழுந்தருளி, திருவீதி உலா வந்து, பகல் 11:00 மணிக்கு நாமக்கல் குளக்கரை அருள்மிகு நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில் சமண திருமஞ்சனம் கண்டருள்வார்கள் இரவு 7:30 மணிக்கு மீண்டும் வாகனங்களில், திருக்கோலங்களில் திருவீதி உலா நடைபெறும்.
விழாவில், 7-ம் நாள் நிகழ்ச்சியாக நரசிம்மர் சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, வரும் 12-ம் தேதி காலை 8:30 மணிக்கு அருள்மிகு நரசிம்ம சுவாமி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், மாலை 4:30 மணிக்கு மேல் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி மற்றும் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
வரும் 17.04.2025 அன்று, மாலை, அருள்மிகு (நாமகிரி தாயார் சன்னதியில் ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.