in

பீர்க்கங்காய் மகத்துவம் தெரிந்து கிராமமே சாகுபடி செய்து அசத்தல்

பீர்க்கங்காய் மகத்துவம் தெரிந்து கிராமமே சாகுபடி செய்து அசத்தல்

 

இயற்கை வேளாண்மை மூலம் பந்தல் அமைத்து காய்த்து குலுங்கும் பீர்க்கங்காய், பச்சை பசேலென கண்ணை பறிக்கும் நிறத்தில் தொங்கும் பீர்க்கங்காய்கள்,

நீரிழிவு நோய், உடல் எடை குறைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி இவற்றிற்கு பீர்க்கங்காய் அவசியம் மருத்துவ குணம் அறிந்து தேடி வந்து வாங்கும் பொதுமக்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர், சிங்காநோடை, பத்து கட்டு, ஆனை கோவில், அனந்தமங்கலம், காழியப்ப நல்லூர், மாமா குடி, உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் இயற்கை வேளாண்மை கொண்டு காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர் குறிப்பாக சிங்கானோடை, ஆணை கோவில், பத்து கட்டு, அனந்தமங்கலம், காழியப்ப நல்லூர் பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த பகுதிகளில் அனைத்துமே இயற்கை உரங்கள் கொண்டு இயற்கை வேளாண்மை மூலம் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது நிலத்தை உழுது பின்னர்  மக்கிய மாட்டு சாணம், மக்கிய குப்பை உரங்கள், பஞ்சகாவியா, மீன் அமிலம் உள்ளிட்ட இயற்கை உரங்களை தெளித்து பின்னர் காய்கறி சாகுபடிகள் செய்யப்படுகிறது.

இதனால் காய்கறி சாகுபடியில் நல்ல மகசூல் கிடைக்கிறது இங்கு விளையும் காய்கறிகள் தரம் நிறைந்து சுவை அதிகமாக இருப்பதால் வெளி ஊர் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து நேரடியாக காய்கறிகள் வாங்கி செல்கின்றனர் இந்தப் பகுதிகளில் கோடைகால சாகுபடியில் வெள்ளரி தர்பூசணி பயிரிடப்படுகிறது மேலும் தற்பொழுது காய்கறி சாகுபடிகளில் புடலங்காய், பீர்க்கங்காய், பாவக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், கொத்தவரை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளும் பயிரிடப்படுகிறது இந்நிலையில் இந்த ஆண்டு பல விவசாயிகள் அதிக அளவில் பீர்க்கங்காய் சாகுபடி செய்துள்ளனர்.

பீர்க்கங்காய் சாகுபடி என்பது ஒரு மாத காலத்தில் அறுவடை செய்யலாம் என்பதும் மேலும் கடந்த சில ஆண்டுகளாக பீர்க்கங்காய் அவசியம் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால் பீர்க்கங்காய் அதிக அளவில் தேவை இருப்பதாகவும் இதனால் இந்த ஆண்டு பல விவசாயிகள் ஆர்வத்துடன் பீர்க்கங்காய் சாகுபடி செய்துள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

பீர்க்கங்காய் என்பது இயற்கையில் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளதாகவும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும் இதன் மூலம் பல நோய்களுக்கு தீர்வு ஏற்படும் என்பதும் தற்போதுள்ள கால நிலையில் அதிக அளவில் நீரிழிவு நோய் தாக்கம் இருப்பதால் அதற்கு முக்கிய காய்கறியாக பீர்கங்காய் விளங்குவதால் பலர் ஆர்வத்துடன் பீர்க்கங்காய் தேடி வந்து வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தற்போதுள்ள காலத்தில் உடல் எடை குறைப்பு என்பது முக்கியத்துவம் பெற்று வருகிறது இதற்கும் ஒரு அருமருந்தாக பீர்க்கங்காய் உள்ளதால் பலர் விரும்புகின்றனர் மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் அருமருந்தாக உள்ளது மேலும் உடல் சூட்டை தணிப்பதற்கும் கல்லீரல் பிரச்சனை தீர்வதற்கும் பீர்க்கங்காய் அவசியம் என கூறப்படுகிறது.

இதன் விழிப்புணர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் அதிகம் பீர்க்கங்காய் விரும்புவதாகவும் இதனால் நல்ல விற்பனை நடைபெறுவதாகவும் அதனை நம்பி இந்த ஆண்டு சிங்காநோடை பகுதிகளில் அதிக விவசாயிகள் பீர்க்கங்காய் சாகுபடி செய்து தற்பொழுது தோட்டத்தில் பீர்க்கங்காய் காய்த்து குலுங்குவதாகவும் தினமும் அறுவடை நடைபெறுவதாகவும் நேரடியாக விற்பனை செய்வதால் நல்ல லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இயற்கை உரங்கள் கொண்டு இயற்கை வேளாண்மை செய்து பீர்க்கங்காய் அறுவடை செய்து விற்பனை செய்வதால் அதுவும் ஒரு மாத காலத்திற்குள் அறுவடை செய்து விற்பனை செய்வதால் தங்களுக்கு வாழ்வாதாரம் ஈட்ட முடிகிறது எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சிங்கானோடை பகுதியில் பீர்க்கங்காய் சாகுபடி செய்து அறுவடை செய்யும் விவசாயிகள் பாலச்சந்தர் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறும் பொழுது இந்தப் பகுதியில் செய்யும் அனைத்து சாகுபடியும் இயற்கை உரங்கள் கொண்டு இயற்கை வேளாண்மை மூலம் சாகுபடி செய்வதாகவும் இதனால் தங்களுக்கு நல்ல மகசூல் கிடைப்பதோடு தரமாக காய்கறிகள் இருப்பதால் தேடி வந்து வியாபாரிகள் பொதுமக்கள் வாங்கி செல்வதாகவும் தங்களுக்கு இதுதான் மகிழ்ச்சி என்றும் இந்த ஆண்டு பீர்க்கங்காய் சாகுபடி அதிக அளவில் செய்துள்ளதாகவும் இதில் தற்பொழுது அறுவடை நடைபெறுவது மற்றும் நல்ல மகசூல் கிடைத்துள்ளதாகவும் இயற்கையாக பசுமையாக தரமாக இருப்பதால் தேடி வந்து வாங்கி செல்வதாகவும் கூறுகின்றனர்.

ஒருபொழுதும் தாங்கள் ரசாயன உரத்தை பயன்படுத்துவது கிடையாது எனவும் இதனால் தான் தங்கள் மண் தன்மை மாறாமல் மண் பலப்பட்டு நல்ல பலன் தருவதாகவும் கூறுகின்றனர்.

What do you think?

சூர்யா 45…இல் இவரும் நடிக்கிறாரா

சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் பங்குனி திருத்தேரோட்டம்