in

தமிழ் புத்தாண்டை முன்னிட்டுமயூரநாதர் ஆலயத்தில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு முத்து அங்கி சாத்தல்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டுமயூரநாதர் ஆலயத்தில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு முத்து அங்கி சாத்தல்

 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு முத்தினால் செய்யப்பட்ட முத்து அங்கி சாத்தப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் அப்பர் திருஞானசம்பந்தர் ஆகியவரால் பாடல் பட்டதுமான மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு பக்தர்கள் பங்களிப்புடன் புதிதாக முத்தினால் செய்யப்பட்ட முத்தங்கி சாத்தப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

இதுபோல் அம்பாளுக்கும் முத்தங்கி சாத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் காலை முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.

What do you think?

படம் பார்த்த பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்ள டாக்டர்களிடம் வேண்டுகோள்

அண்ணல் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சமத்துவ உறுதிமொழி