in

ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா கடற்கரை வரை 604 கி.மீ தொடர் நீச்சல் சாகச பயணம்

ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா கடற்கரை வரை 604 கி.மீ தொடர் நீச்சல் சாகச பயணம்

 

ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா கடற்கரை வரை 604 கி.மீ தொடர் நீச்சல் சாகச பயணமாக செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புதுச்சேரியில் வரவேற்பு…

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வேவ் ரைடர்ஸ் விளையாட்டு குழுவும் இணைந்து 15 மாற்றுத்திறனாளிகள் ராமேஸ்வரம் மண்டபம் மரைக்காயர்பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து சென்னை மெரினா வரை 604 கிலோ மீட்டர் தொடர் நீச்சல் சாகச பயணத்தை கடந்த 5-ந் தேதி தொடங்கினர்.

மாலை 6 மணிக்கு புதுச்சேரிக்கு வந்தனர். அவர்களுக்கு புதுவை தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ. சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ. இளங்கோ மற்றும் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் மற்றும் பலர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளை பாராட்டினர்.

இந்தநிலையில் அவர்கள் (திங்கட்கிழமை) காலை புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மரக்காணம், மகாலிபுரம் வழியாக சென்னை மெரினா கடற்கரையை வருகிற 15-ந் தேதி சென்றடைய திட்டமிட்டு உள்ளனர்.

What do you think?

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு கண் சிகிச்சை முகாம்

வீடுகள் தோறும் தேசியக்கொடி போலீசார் தேசியக் கொடியுடன் புதுச்சேரி நகர வீதிகளில் அணிவகுப்பு.