in

வாய்க்காலில் மீன் பிடிக்க வலை வீசியபோது சிக்கிய முதலை குட்டி

வாய்க்காலில் மீன் பிடிக்க வலை வீசியபோது சிக்கிய முதலை குட்டி

 

சிதம்பரம் அருகே வாய்க்காலில் கடந்த முதலை குட்டி. மீன் பிடிக்க வலை வீசியபோது சிக்கியது. வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்துச் சென்று ஏரியில் விட்டனர்.

சிதம்பரம் அருகே உள்ளது பு.ஆதிவராகநல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள வாய்க்கால் ஒன்றில் இளைஞர்கள் சிலர் மீன் பிடிப்பதற்காக வலை வீசியுள்ளனர்.

அப்போது சுமார் 3 நீளமுள்ள முதலைகுட்டி ஒன்று வலையில் சிக்கியது. பின்னர் இளைஞர்கள் முதலைகுட்டியை பிடித்து கரைக்கு எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த வனத்துறை ஊழியர்கள் ஆதிவராகநல்லூர் கிராமத்துக்கு சென்று முதலைகுட்டியை மீட்டனர். சுமார் 3 அடி நீளமுள்ள இந்த முதலைகுட்டியை வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்துச் சென்று சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் விட்டனர்.

What do you think?

இந்தியா கூட்டனி பலமான எதிர்கட்சியாக உள்ளதால் பா.ஜ.க ஆட்சி தினிக்க நினைக்கின்ற பிரகாஷ்காரத் பேச்சு

மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உட்பிரகாரம் வலம்