ஊருக்குள் உலா வரும் கரடி! பொதுமக்கள் அச்சம்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் அதிகாலையில் உலா வரும் கரடி பொதுமக்கள் அச்சம் செல்போனில் வைரலாகும் கரடி சிசிடி காட்சிகள்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் கரடி ஒன்று ஊரில் உலா வருவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இராஜபாளையம் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இங்கு சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், மிளா, கரடி உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகிறது.
குறிப்பாக இங்குள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அவ்வப்போது விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாயிகளுக்கு தொந்தரவு செய்வது வருவது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் கரடி ஒன்று அதிகாலையில் பேருந்து நிலையம் மற்றும் ஊரில் முக்கிய பகுதிகள் வழியாக உலா வருவது போன்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஏற்கனவே விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்து வந்த வனவிலங்குகள் தற்போது ஊருக்குள் புகுந்திருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் விரைவாக செயல்பட்டு ஊருக்குள் உலா வரும் கரடியை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது.