in

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான இலவச செயற்கை கால் உபகரணங்கள் வழங்கும் முகாம்

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான இலவச செயற்கை கால் உபகரணங்கள் வழங்கும் முகாம்

 

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களை உடனுக்குடன் தயாரித்து இலவசமாக வழங்கும் பிரத்தியேக முகாம்: நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால், கைகள் உடனுக்குடன் செய்து கொடுத்தனர்.

மதுரை பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ பகவான் மகாவீர் விக்கலாங் உதவி குழு இணைந்து நடத்தும் இலவச செயற்கை கால் உபகரணங்கள் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

இன்று முதல் மூன்று நாட்கள் நடைப்பெறும் இந்த முகாமில் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, செயற்கை கால், காலிபர்ஸ், வீல் சேர், வாக்கர் ஆகிய உடனுக்குடன் தயாரித்து வழங்கப்பட்டு வருகின்றனர். முதல் நாளான இன்று 100க்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளி களுக்கு கை, கால் அளவினை சரிபார்த்து உபகரணங்களை உடனுக்குடன் தயார் செய்து வழங்கி வருகிறார்கள்.

What do you think?

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்..

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவசமாக உணவு வழங்கும் தன்னார்வலர்களுக்கு தடை