புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிமீனாக்ஷி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது
புகைப்பிடிக்கும் ஒவ்வொரு நபரும் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் செய்ய வேண்டும் – மருத்துவமனை நிபுணர்கள் தகவல்
நிக்கோடினுக்கு அடிமையானவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெற்று புகைப்பிடிப்பதி இருந்து விடுபடலாம் என மதுரை மீனாட்சி மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மே 31 ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் நுரையீரல் சிகிச்சை நிபுணர் மருத்துவர் வேல்குமார், கதிர்வீச்சு புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர் K.S. கிருஷ்ண குமார் மற்றும் கிருஷ்ண குமார் ரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்று புகையிலையினால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகள் குறித்தும் நிகோடின் தொடர்பான விளக்கத்தையும் அளித்தனர்.
பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கஞ்சா,கொகைன் போன்ற போதை பொருட்களை காட்டிலும் புகைப்பிடிப்பதில் அடிமையாகி அதிலிருந்து விடுபடுவதற்கு சிரமமாக ஒன்றாக இருந்து வருகிறது.
புகைப்பிடிப்பவர்கள் 2.5 அங்குல சிகரெட்டில் 4000 க்கும் அதிகமான வேதிப்பொருட்கள் இருப்பதாகவும், அதிலிருந்து சுமார் 50% சதவீத புற்றுநோய்கள் பரவுவதாகவும் எனவே அதிலிருந்து விடுபடுவதற்கு முறையான கலந்தாய்வு தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
ஆரம்ப காலகட்டத்திலேயே புகை பிடிப்பதை நிறுத்தி முறையான சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். எனவே புகைப்பிடிக்கும் ஒவ்வொரு நபரும் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் செய்ய வேண்டியது அவசியம் என்றார்.