in

கர்நாடக காவல்துறையினர் சென்ற காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து


Watch – YouTube Click

கர்நாடக காவல்துறையினர் சென்ற காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

 

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிறப்பு ஆயுதப்படை காவலர்கள் பிரபாகரா, விட்டல் Y.கட்டார், ஹேமந்த் குமார் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார், ஜெயக்குமார் ஆகிய ஐந்து பேரும் நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக சென்னையில் தீவிர பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று ஒருநாள் (12.04.2024) விடுமுறை என்பதால் இவர்கள் 5 பேரும் சென்னையிலிருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அரசு பொலிரோ காரில் வந்து கொண்டிருந்தனர்.

அதே வேலையில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற பேருந்து கீழ்பெண்ணாத்தூர் அருகே பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது

காவல்துறையினர் வந்த காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிறப்பு ஆயுதப்படை காவலர்கள் பிரபாகரா மற்றும் விட்டல் ஒய் . கட்டார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் தினேஷ் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.

தொடர்ந்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த்குமார் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக சேலம் மற்றும் வேலூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பலியான மூன்று காவலர்களின் உடல்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று காலை திருவண்ணாமலை ஆயுதப்படை மைதான வளாகத்தில் வைக்கப்பட்டு 3 சுற்றுகள் வீதம் 7 காவலர்கள் 21 குண்டுகள் முழங்க அரசு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மற்றும் கர்நாடக மாநில எஸ்.பி உள்ளிட்டோர் இறந்த 3 காவலர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் அவரவர்கள் இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சாலையில் நடைபெற்ற கோர விபத்தில் மூன்று காவலர்கள் ஒரே நேரத்தில் வெளியானது வெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

கோலகலமாக தொடங்கிய மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா

தேர்தல் கமிஷன் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை