in

டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி அடியில் புகுந்த கார்.

டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி அடியில் புகுந்த கார்.

காரில் பயணித்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே பலி.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சிங்கலமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் அடியில் புகுந்து விபத்து ஏற்பட்டது.

இதனால் கார் முழுவதும் நசுங்கி நிலையில் காரில் பயணித்த ஆறு பேரும் உடல்கள் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மரணம் அடைந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் மரணமடைந்த அனைவரும் அனைவரும் அனந்தபூரில் உள்ள இஸ்கான் கோவிலில் பிரதிநிதிகள் என்று தெரியவந்துள்ளது.

What do you think?

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?

தமிழக வெற்றிக் கழக மாநாடு கழுகு பார்வை