in ,

வேன் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து- பட்டாசு தொழிலாளர்கள் 15 பேர் காயம்

வேன் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து- பட்டாசு தொழிலாளர்கள் 15 பேர் காயம்

விருதுநகர் – சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கணபதி மில் விலக்கில்
பட்டாசு தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் பட்டாசு தொழிலாளர்கள் 15 பேர் காயமுற்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை மாவட்டம் வில்லூரிலிருந்து இன்று காலை 17 பேர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி பட்டாசு ஆலைக்கு ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர்.

விருதுநகர் அருகே கணபதி மில் விலக்கு பகுதியில் எம்ஜிஆர் சாலை பகுதியிலிருந்து வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பட்டாசு தொழிலாளர்கள் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விருதுநகர் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

What do you think?

திருத்துறைப்பூண்டியில் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

திமுகவின் கொடியையும் கொள்கைகளையும் பட்டித் தொட்டி எல்லாம் தெரியவைத்து திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர்