in

மதுரை கே.கே.நகரில் உள்ள சினிமா தியேட்டரில் துர்நாற்றம் வீசியதாக நுகர்வோர் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு

மதுரை கே.கே.நகரில் உள்ள சினிமா தியேட்டரில் திண்பண்டங்கள் குப்பை அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசியதாக மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள நுகர்வோர் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு

3 வக்கீலுக்கு தலா ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்கும்படி நுகர்வோர் ஆணையம் உத்தரவு

மதுரை கே.கே.நகரை சேர்ந்த தங்கதுரை, அரவிந்த்சாமி, மகேந்தர்ராஜன் ஆகியோர் மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு

நாங்கள் உள்பட 5 பேர் மதுரை கே.கே.நகரில் உள்ள ஜாஸ் அன்டு அர்ஸ் சினிமா தியேட்டரில் 17.1.2024 அன்று சினிமா பார்ப்பதற்காக 5 டிக்கெட் முன்பதிவு செய்தோம். இதற்காக ரூ.1387-ஐ ஆன்லைன் வழியாக தியேட்டருக்கு செலுத்தினோம். பின்னர் தியேட்டருக்கு சென்றோம். அப்போது அங்கு கார் பார்க்கிங்கிற்காக ரூ.40 கட்டணத்தை பெற்றனர். அதனை செலுத்திவிட்டு தியேட்டருக்குள் சென்றோம். எங்களுக்கு ஒதுக்கிய சீட்டுகளின் அடியில் குப்பைகளை சேகரித்து குவித்து வைத்திருந்தனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. கொசுக்கடியாலும் கடும் அவதிக்கு ஆளானோம். இதன் காரணமாக தியேட்டரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டோம்.

எங்களுக்கு முந்தைய சினிமா காட்சியை பார்த்தவர்கள் சாப்பிட்ட திண்பண்டங்கள், குளிர்பானங்கள் போன்றவை அப்புறப்படுத்தாமல் நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் அடியில் குவிக்கப்பட்டு இருந்தது தியேட்டர் நிர்வாகத்தின் சேவை குறைபாட்டை பிரதிபலிக்கிறது. எனவே நாங்கள் செலுத்திய கட்டணத்தொகையை திருப்பி செலுத்தவும், மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பிறவிபெருமாள், உறுப்பினர் சண்முகபிரியா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், தியேட்டரில் இருந்த அசுத்தம் காரணமாக மனுதாரர்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே 3 மனுதாரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். எதிர்மனுதாரரின் தியேட்டரில் சேவை குறைபாடுடன் செயல்பட்டதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

What do you think?

அருள்மிகு திருமலைநம்பி ( மலைநம்பி ) திருக்கோயிலில் இராமானுஜ ஜீயா் சுவாமிகள் மங்களாசாசனம்

76ஆவது குடியரசு தின விழா மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தேசிய கொடி ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்பு