in

விஸ்வரூபம் எடுக்கும் போலி உயில் மூலம் நிலம் அகபாரிப்பு விவகாரம்

விஸ்வரூபம் எடுக்கும் போலி உயில் மூலம் நிலம் அகபாரிப்பு விவகாரம்.

 

ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் உழவுக்கரை சப்ரிஜிஸ்டர் அலுவலக செக்யூரிட்டி கைது.

உழவர்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் உயில் புத்தகத்தை கிழித்து போலி ஆவணங்களை ஒட்டி நிலங்களை அபகரித்த செக்யூரிட்டியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்….

புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் நிலம் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்த சம்பவத்தை தொடர்ந்து பத்திரப்பதிவு துறையில் உள்ள உயிர்களை மறு ஆய்வு செய்யப்பட்டது.

அதில் உழவர் கரை சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் மட்டும் கடந்த 1980 முதல் 2001 ஆம் ஆண்டு வரை 9 உயில்களை திருத்தி போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உழவர்கரை சப் ரிஜிஸ்டர் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் உயிலை ஆய்வு செய்ததில் சாரம் கவிக்குயில் நகரில் 3600 சதுர அடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக சென்னையை சேர்ந்த சித்ரா கடந்த 7ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சித்ரா மூலம் நிலத்தை விற்பனை செய்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை எம்.டி.எஸ் ஊழியர் ரவிச்சந்திரன் 61, புரோக்கர்கள் சித்தாந்தம் 48, மஞ்சினி 59, பத்திர எழுத்தர் மணிகண்டன் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி கைது செய்தனர்…

இவர்களில் மணிகண்டன் புரோக்கர்கள் சித்தாந்தம், மஞ்சினி ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் ஆறு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் பேரில் உழவர்கரை சப் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்குள் சென்று உயில் ஆவணங்களில் உள்ள கைரேகைகளை, கையொப்பம் தகவல்களை கிழித்து எரிந்து, போலி ஆவணங்களை ஒட்டிய தனியார் நிறுவன செக்யூரிட்டி ஏம்பலம், கம்பளி காரன் குப்பம், மாரியம்மன் கோவில் வீதி, உத்தரவேலுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆதரவு படுத்தி சிறையில் அடைத்தனர்…

What do you think?

சாலையோர வியாபாரிகளுக்கு கடன்‌ வழங்கும் திட்டம் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு…

புதுச்சேரியில் 305 காவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்….