கால்நடைகளுக்கு வீடு தேடிச் சென்று கோமாரி தடுப்பூசி போடும் நிகழ்வு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகர பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகளுக்கு வீடு தேடிச் சென்று கோமாரி தடுப்பூசி போடும் நிகழ்வு அரசு கால்நடை மருத்துவர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது.
தமிழக அரசு உத்தரவின்பேரில், 6 மாதத்திற்கு ஒருமுறை கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வந்தவாசி நகரபகுதி 1 வது வார்டில் கோமாரி தடுப்பூசியை அரசு கால்நடை மருத்துவர் வெற்றிவேல் தலைமையிலான குழுவினர் போட்டனர்.
மேலும் கால்நடைகள் ஊசி போட்ட உடன் கால்நடை மருத்துவர் வெற்றிவேல், தொடரவேண்டிய மருத்துவம் குறித்தும் அடுத்து எப்பொழுது போட வேண்டுமென்ற விளக்கத்தையும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு கூறினார்.
மாடுகள் இருக்கும் பகுதிக்கு சென்று தடுப்பூசி போடும் பணியால் கால்நடை வளர்ப்பவர்கள் தமிழக அரசுக்கும் கால்நடை மருத்துவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்வில், கால்நடை உதவியாளர் குமார், சமூக ஆர்வலர் எம்.பி. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.