in

வாக்குமூலத்தை வைத்து வழக்கு பதிவு செய்யக்கூடாது… பல்டி அடித்த மாலா பார்வதி


Watch – YouTube Click

வாக்குமூலத்தை வைத்து வழக்கு பதிவு செய்யக்கூடாது… பல்டி அடித்த மாலா பார்வதி

ஹேமா கமிட்டி மலையாள திரையுலகத்தையே புரட்டி போட்டது. ஹேமா கமிட்டியின் அடிப்படையில் விசாரணை செய்ய பெண் ஐபிஎஸ் அதிகாரிகளின் குழு பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது. தற்பொழுது நான் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று பின் வாங்குகிறார்

நடிகை மாலா பார்வதி தனது வாக்குமூலத்தை வைத்து வழக்கு பதிவு செய்யக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார் இது குறித்த அவர் அறிக்கையில் …..ஹேமா கமிட்டியில் நாங்கள் வாக்குமூலம் அளித்த போது பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு இல்லை எங்களுக்கான பாதுகாப்பை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் . “கல்வி நோக்கங்களுக்காக” தான் கமிட்டியின் முன் அறிக்கைகளை வழங்கியதாகவும், அவை இப்போது “குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான தவறாக நோக்கில் மாற்றப்பட்டுள்ளன” என்றும் கூறினார்.

வழக்கு பதிவு செய்ய நான் புகார் அளிக்கவில்லை எனக்கு புகார் அளிக்கும் எண்ணமோ வழக்கு தொடுக்கும் எண்ணமோ இல்லை. நேரடியாக தொடர்பில்லாத நபர்களை எஸ்ஐடி அழைத்து துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். இது தனது நேர்மையைக் கெடுக்கிறது மற்றும் குழுவின் நோக்கத்தையே குலைக்கிறது .
.எனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது எனவே எனது வாக்குமூலத்தை அடிப்படையை வைத்து விசாரணை நடத்தக்கூடாது என்று மனு வில் கூறியுள்ளார். இவர் அடித்த தீடிர் பல்டி…இக்கு சினிமா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

விரைவில் காதலியை கரம் பிடிக்கும் நாகார்ஜுனாவின் மகன் அகில் நாக சைதன்யா

எஸ்.ஜே.சூர்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழகம்