in ,

வெம்பக்கோட்டை அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட முழுமையான சங்கு வளையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

வெம்பக்கோட்டை அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட முழுமையான சங்கு வளையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜீன் 18-ம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது.

முன்னதாக கண்ணாடி மணிகள் கல்மணிகள் மற்றும் பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி,கிபி 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால செம்பு காசு,அணிகலன்கள்,சங்கு வளையல்கள்,திமிலுடன் கூடிய காளை உருவ பொம்மை உள்ளிட்ட 1400-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெற்ற அகழாய்வு பணியின்போது அலங்கரிக்கப்பட்ட முழு சங்கு வளையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஏராளமான சங்கு வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முழுமையான சங்கு வளையல் கிடைத்துள்ளது.

இதன் மூலம் சங்கு வளையல்களை அலங்கரித்து மெருகேற்றம் செய்யும் கூடம் இந்த பகுதியில் இருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

What do you think?

விருதுநகர் சின்ன பேராலி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறக்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி பேராசிரியர் மற்றும் பெட்ரோல் பங்க உரிமையாளர் மனைவியிடம் 20 பவுன் நகை பறிப்பு