மின்சார ஒயர் மீது தடுமாறி விழுந்த கட்டிட தொழிலாளி
மின்சார ஒயர் மீது தடுமாறி விழுந்த கட்டிட தொழிலாளி அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடியைச் சேர்ந்தவர் செந்தில் குமார்.இவர் குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரம் கீழத்தெருவில் உள்ள ராஜ்குமார் என்பவர் வீட்டில் நடைபெறும் கட்டிடப் பணிக்காக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது சிமெண்ட் கலவை சுமந்து செல்லும் பொழுது வெளிச்சத்திற்காக போடப்பட்டிருந்த டியூப்லைடுக்கான மின்சாரம் ஒயர் தடுக்கி கீழே விழுந்தார். அப்போது மின்சார ஒயர் ஒரு பக்கம் செந்தில் மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த குத்தாலம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.