in

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகள் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது

தமிழகத்தின் பழமையான பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதிய கட்டிடங்கள் அமைக்கவும் , நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியாக புற்றுநோயியல் பிரிவை செயல்படுத்தி தென்மாவட்டத்தில் முன்மாதிரி புற்றுநோய் சிகிச்சை மையமாக செயல்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது என நெல்லை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவையின் மதிப்பீட்டு குழு தலைவர் காந்தி ராஜன் தெரிவித்துள்ளார்.

2024-25 ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டங்கள் தொடர்பாக சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்தி ராஜன் தலைமையில் குழு உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகள் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவின் தலைவர் காந்தி ராஜன்

2024-25 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதில் அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மூலைக்கரைப்பட்டி பகுதியில் 50 கோடி ரூபாய் மதிப்பில் புறவழிச் சாலை, ராஜாபுதூர் பகுதியில் எட்டு கோடி ரூபாய் மதிப்பில் புறவழிச்சாலை, ராதாபுரம் சட்டமன்ற தொகுதி சமூக ரங்கபுரத்தில் 21 கோடி ரூபாய் மதிப்பில் புறவழிச்சாலை, கள்ளிகுளம் பகுதியில் 22 கோடி ரூபாய் மதிப்பில் புறவழிச் சாலை அமைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாநகர் பகுதியில் மேலப்பாளையம் பேட்டை இடையே 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைப்பதற்கும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்குட்பட்ட வன பகுதிகளில் காட்டுப்பன்றி சிறுத்தை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறாமல் இருக்கவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் வேலைகள் அமைக்க பரிந்துரைத்துள்ளோம், ரூபாய் 77 கோடி மதிப்பீட்டில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே கட்டப்பட்ட வரும் மருத்துவமனை கட்டிடத்தில் புற்றுநோயியல் துறைக்கு என தனி பிரிவை உருவாக்கி தென் மாவட்டத்திலேயே சிறந்த மருத்துவமனையாக அமைய குழு பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் பழமையான சிறைச்சாலைகளில் ஒன்றாக உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது புதிதாக கட்டிடங்கள் அமைக்க கோரிக்கைகள் எழுந்துள்ளது. சட்டத்துறைக்கு எங்களது வலியுறுத்தல்களை தெரிவித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட உள்ளது.

விவசாய நிலங்களை மான்கள் சேதப்படுத்துவதாக விவசாயிகளிடமிருந்து புகார்கள் வரப்பட்டுள்ளது கங்கைகொண்டான் மற்றும் மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழக பகுதியில் சுற்றி தெரியும் மான்களைப் பிடித்து சரணாலயத்தில் கொண்டுவிட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு குழுவிற்கு அறிக்கையை சமர்ப்பித்தவுடன் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள புள்ளிமான் சரணாலயத்தின் மதில் சுவர்கள் போதிய உயரம் இல்லாமல் இருப்பதால் மான்கள் வெளியேறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருவதால் கூடுதல் நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல்கள் செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற மதிப்பீட்டு குழுவின் முதற்கட்ட ஆய்வை திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 200 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்திலிருந்து 70 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

What do you think?

வாவாநகரம் வனப்பகுதியில் காட்டு யானை அட்டூழியம். 1200 ரோபஸ்டா வாழை மரங்கள் சேதம்.

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் இயக்குதல் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் துவக்கி வைத்தார்.