in

நாகையில் நாய்க்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தம்பதி 100 தெரு நாய்களுக்கு கறி விருந்து போட்டு அசத்தியுள்ளனர்

நாகையில் நாய்க்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தம்பதி 100 தெரு நாய்களுக்கு கறி விருந்து போட்டு அசத்தியுள்ளனர். இது குறித்த சுவாரசியமான தகவல்களை பார்ப்போம்

வளர்ப்பு பிராணிகளில் நன்றி உள்ள ஜீவன் என்பதால் நாய்களுக்கு தனியிடம் உண்டு. மனிதர்கள் சோர்வாக இருக்கும் போது சிறிது நேரம் நாயுடன் விளையாடினால் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். அந்த அளவுக்கு நாய் தன்னை வளர்ப்பவர்களை கவர்ந்து இழுத்து விடும். அந்த வகையில் வீட்டில் ஒருவராக பார்க்கப்படும் நாய்களுக்கு வளைகாப்பு நடத்தப்படும் நிகழ்வும் நடைபெற்றதை காண முடிந்தது.

அந்த வகையில் நாகையில் ஒரு தம்பதி தங்களது வளர்ப்பு நாய்க்கு கேக் வெட்டி கொண்டாடியது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
நாகை மாவட்டம் நாகூர் அருகே வாஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா- கோமதி தம்பதியினர். இவர்கள் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ந்து வந்த வால்டர் என்ற பெயர் கொண்ட நாயின் பிறந்தநாளை தான் அவர்களது குடும்பத்தினர் விமர்சையாக கொண்டாடி உள்ளனர்.

இதற்காக கோமதியின் வீடு பலூன் உள்ளிட்ட அலங்கார தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரத்தியேக தைக்கப்பட்ட புத்தாடை உடுத்தி, அலங்காரம் செய்யப்பட்ட நாய் வால்டரை நாற்காலியில் அமர வைத்து கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் 3 – வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாடியது மட்டுமில்லாமல் அங்குள்ள 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு இறைச்சி சாப்பாடு போட்டு செல்லப்பிராணிகள் மீதான அன்பை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த பிறந்தநாள் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருள் ஆகி உள்ளது..

What do you think?

ராஜபாளையத்தில் விசாரிக்க சென்ற இரண்டு காவலர்களை குடிபோதையில் இருந்த கும்பல் லாட்டியால் சரமாரியாக தாக்கிய வீடியோ ஏழு பேர் கைது

400 ஆண்டு பழமையான நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம்