in

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் தம்பதியினர் தர்ணா

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் தம்பதியினர் தர்ணா

தனது வீட்டுமனை பட்டாவை அபகரித்துக் கொண்டு உறவினர் தன்னை வீட்டைவிட்டு துரத்தி விட்டதாக கண்ணீர் மல்கப் புகார்

புதுச்சேரி வாதானூர் இருளர் குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் ஜெயபால் இவரது மனைவி மாற்றுத்திறனாளியான பழனியம்மாள் அவர்கள் இன்று இரண்டு குழந்தைகளோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களை அழைத்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது அவர்கள் தனக்கு இருந்த வீட்டு மனை பட்டாவில் மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து வீடு கட்டினேன். தற்போது தனது மைத்துனரான பழனிவேல்
வீட்டோடு எனது இடத்தை அபகரித்துக் கொண்டு தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து திருவனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் புகார் எடுக்கவில்லை எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க வலியுறுத்தினார்.

இதன் அடுத்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பிரச்சனையை தீர்க்க உத்தரவிட்டார்.

வீட்டுமனையை அபகரித்துக் கொண்ட சம்பவத்தில் தம்பதியினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது..

எனக்கு என்று வழங்கப்பட்ட வீட்டுமனை மனபட்டாவை தனது மைத்துனரான பழனிவேல் அபகரித்துக் கொண்டு தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்.

இதனால் தங்க இடம் இல்லாமல் தெருவோரங்களிலும் மரத்தடிகளிலும் இரண்டு குழந்தைகளோடு கஷ்டப்பட்டு வருகிறேன் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக்கென்று ஒதுக்கப்பட்ட இலவச மனை பட்டாவை என்னிடம் வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

What do you think?

மதுரை அழகர் கோவில் சாலையில் திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை குறித்த கையேடு வெளியீட்டு விழா நடைப்பெற்றது

லால்குடியில் முன்விரோதத்தில் தமிழக வெற்றி கழக பிரமுகர் வெட்டிக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி மீது துப்பாக்கி சூடு