சிறுத்தை நடமாட்டம் ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்க்க குவியும் கூட்டம்
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் நேற்று இரவு சிறுத்தை புலி ஒன்றிய நடமாடியதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சுமார் 5 அடி நீளம் உள்ள மிகப்பெரிய சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.
நகரின் மையப்பகுதியில் காவிரி ஆற்றின் கிளை ஆறான பழங்காவிரி இரு கரை பகுதியில் அமைந்துள்ள முதல் போன்ற காட்டுப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்று தெரியப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் வனத்துறையினர் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வனத்துறை அதிகாரிகள் கோடியக்கரை சரணாலயத்தை சேர்ந்த வன உயிரின ஆய்வாளர் மற்றும் மயிலாடுதுறை குத்தாலம் சீர்காழி மணல்மேடு பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
எந்த பகுதியில் சிறுத்தை பதுங்கி இருக்கிறது என்று தெரிய வந்த பின்னரே கூண்டு வைத்து பிடிக்கும் பணி நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்ப்பதற்கு சிறுத்தை இருப்பதாக கூறப்படும் பகுதியில் குவிந்து வருவதால் அவர்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
நள்ளிரவு நடைபெற்ற சம்பவத்திற்கு பிறகு வனத்துறை உதவி அலுவலர்கள் தலைமையில் மட்டுமான குழுவினர் மட்டுமே தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட வன அதிகாரி சம்பவ இடத்திற்கு வராததால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் வனத்துறையினர் தடுமாறி வருகின்றனர்.