in

விஜய்யின் வெற்றிக்கழக மாநாட்டிற்கு 200 கிலோ மீட்டர் ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டி செல்லும் மாற்றுத்திறனாளி

விஜய்யின் வெற்றிக்கழக மாநாட்டிற்கு 200 கிலோ மீட்டர் ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டி செல்லும் மாற்றுத்திறனாளி

 

பாபநாசத்தில் உற்சாக வரவேற்பு அளித்த விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்

தஞ்சாவூரிலிருந்து விக்கிரவாண்டியில் நடைபெறும் விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு ஒற்றைக்காலில் சுமார் 200 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் செல்லும் விஜய் தீவிர ரசிகரான மாற்றுத்திறனாளி ராஜா (45) தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு பாபநாசம் வந்தடைடைந்த மாற்றுத்திறனாளி ராஜாவிற்கு பாபநாசம் தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சால்வை அணிவித்து தேவைப்படும் உணவுப் பொருட்கள் வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்து ராஜாவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்.

சைக்கிளில் செல்வது குறித்து மாற்றுத்திறனாளி ராஜா கூறும்போது 13 வயதில் ஒரு விபத்தில் தனது காலை இழந்ததாகவும் தீவிர விஜய் ரசிகரான நான் எந்த ஒரு கட்சியிலும் மாற்றுத் திறனாளி அணி என ஒரு பிரிவு இல்லை எனவும் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுத்திறனாளி அணி உருவாக்கி மாற்றுத்திறனாளிகளுக்கு பொறுப்புகள் வழங்கி மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்க வேண்டும் அதனால் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தனது ஒற்றைக்காலில் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

What do you think?

கஜினி பார்ட் 2 Coming Soon

எம்ஐடி கல்வியின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினரின் 5 நாள் சோதனை நிறைவு