மாதிரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தார் சாலையில் உள்ள ஜல்லி சறுக்கியதால் திடீர் மரணம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாதிரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரியும் திருவாவடுதுறை ஊராட்சி பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்த சம்சுதீன் மகன் நூருல் ஹக் (50) நேற்று இரவு வழக்கம் போல் மருத்துவமனை பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்லும் வழியில் மாதிரி மங்கலம் மெயின் ரோடு பகுதியில் தார் சாலையில் உள்ள ஜல்லியில் சறுக்கி கீழே விழுந்ததில் மருத்துவரின் தலையில் அடிபட்டு குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பின்பு உடலை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுபவிக்கப்பட்டது. இது தொடர்பாக குத்தாலம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவர் உயிரிழப்பால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.