in

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சொந்த ஊரை மறக்காமல் ஆம்புலன்ஸ் சேவையை வழங்கிய மருத்துவர்


Watch – YouTube Click

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சொந்த ஊரை மறக்காத மருத்துவர்

பிறந்த கிராமத்தின் சுற்றுப்புற பகுதிகளில் விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஆம்புலன்ஸ் சேவையை வழங்கிய நல்லாடை மருத்துவர் ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார். தேனிசை தென்றல் தேவாவின் இன்னிசை கச்சேரி கிராமமக்களை கவர்ந்தது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை கிராமத்தை சேர்ந்த சிசேல் தொழிலதிபர் டாக்டர் ராமதாஸ் இவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு சீசல்ஸ் நாட்டில் சென்று அங்கே செட்டில் ஆகிவிட்டார் இருப்பினும் சொந்த ஊரை மறக்காமல் தான் பிறந்த நல்லாடை கிராமத்தில் கோயில் கும்பாபிஷேகங்கள் பள்ளி சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளை நல்லாடை டாக்டர் ராமதாஸ் சகோதரர்கள் சமூக நல அறக்கட்டளை மூலம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக நல்லாடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த கிராமப்புற ஏழை எளிய மக்கள் அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார் இதற்கான விழா நல்லாடையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளாராக சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சிசேல் தொழிலதிபர் டாக்டர் ராமதாஸ் சேவையை பாராட்டி வாழ்த்துரை வழங்கி ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, பூம்புகார் எம்.எல்.ஏ.நிவேதாமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, ஆகியோரின் திரைப்பட இன்னிசை கச்சேரி கிராமமக்களை வெகுவாக கவர்ந்தது.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் 6 பேர் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவுகிறது

ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்தால்தான் மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவார்கள்