பசி என்று தவித்த பூனை குட்டிக்கு பால் கொடுத்து பசி ஆற்றிய நாய்
எதிரியாய் இருந்தாலும் பசின்னு வரும்போது அவனுடைய பசியை ஆற்றணும் அதுதான் மனிதாபிமானம்…. பசியோடு தவித்த பூனை குட்டிக்கு பால் கொடுத்து பசியாற்றிய நாயின் கருணை உள்ளம்
இணையத்தில் வைரல் ஆகி வரும் வீடியோ
பொதுவாகவே நாய்க்கும் பூனைக்கும் பகை என்று சொல்வார்கள் இதனால் பெரும்பாலானோர் நாயை வீட்டில் வளர்த்தாலும் பூனைகளை வளர்ப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே…
ஆனால் என்னதான் பகையாக இருந்தாலும் பசி என்று வரும் போது ஒரு வேலை சாப்பாடு கொடுத்து அவனுடைய பசியை ஆற்றினால் அதுதான் மனிதாபிமானம் என்று பல்வேறு இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது.
இது மனிதர்களுக்கு தெரியுமோ இல்லையோ ஆனால் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு தெரிந்து உள்ளது என்பதுதான் அதிசயம்.
இது போன்ற கருத்துக்கள் மனிதனுக்கு மட்டுமே சொந்தமானவை கிடையாது ஆனால் சில நேரங்களில் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கும் இந்த கருத்துக்கள் ஒத்து வருகிறது.
அப்படிதான் பசி என்று தவித்த ஒரு பூனை குட்டிக்கு பால் கொடுத்து பசியாற்றிய நாயின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி மன்னாடிபட்டு ஏரிக்கரை ஓரம் தில்லையம்மன் கோவில் உள்ளது. இந்தப் பகுதியில் தினந்தோறும் தெருவில் சுற்றும் தெரு நாய்கள் படுத்து ஓய்வு எடுப்பது வழக்கம்.
அந்தப் பகுதியில் பசியோடு சுற்றித்திரிந்த ஒரு பூனை குட்டி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வந்த நிலையில் அருகில் படுத்து இருந்த நாயின் மடியில் பாலை குடித்து பசி ஆற்றியது.
ஆனால் அப்போது பூனைக்குட்டியை பார்த்த நாயும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தாய் உள்ளத்தோடு தனது நாய்க்குட்டிக்கு பாலை கொடுப்பது போன்று சுகமாக பூனைக்கு பால் கொடுத்து பூனையின் பசியை ஆற்றியது.
மேலும் இந்த காட்சியை அந்த வழியை சென்ற ஒருவர் அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பசி என்று தவித்த பூனை குட்டிக்கு பால் கொடுத்து பசி ஆற்றிய நாயின் கருணை உள்ளம் மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.