சென்னையில் வருகிறது ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் உருவாக்கும் பணியை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அ.மு.சித்திக் தொடங்கி வைத்தார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இதற்கான மெட்ரோ ரயில் உருவாக்கும் பணியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்திருந்த நிலையில், ரயில் உருவாக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், தொடங்கி வைத்து,
ஒட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) உருவாக்க ரூ.1215.92 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் முடிவடைந்து உரிய பரிசோதனைகளுக்கு பின்னர் ஆகஸ்ட் மாதத்துக்குள் பூந்தமல்லி பணிமனையில் மெட்ரோ ரயில்வே நிர்வாகத்திடம் ரயில்கள் ஒப்படைக்கப்படவுள்ளது. இதையடுத்து இரண்டாம் வழித்தடத்தில் பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்களும் நடத்தப்படும்.
குளிரூட்டப்பட்ட 3 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் சுமார்1000 பயணிகள் வரை பயணிக்கலாம். அவசரகால வெளியேற்ற கதவுகள், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் தடைகளை கண்டறியும் கருவிகள் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் நகர்ப்புற போக்குவரத்தில் ஒரு புதிய வரலாற்றை படைக்கும் என்றார் அவர்.