குதிரையில் அமர்ந்தபடி படம் பார்க்க வந்த ரசிகர்
கடந்த வாரம் விக்கி கெளஷல் ரஷ்மிகா நடிப்பில் வெளியான சாவா திரைப்படம் உலக அளவில் 300 கோடியை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ் ரசிகர்கள் போல மும்பை ரசிகர்கள் திரைப்டம் வெளியாகும் போது அத…கலம் …படுத்துபவர்கள் அல்ல ஆனால் சாவா படம் வெளியான பொழுது போஸ்டருக்கு மும்பை ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர்.
நாக்பூரில் சாவா படம் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தியேட்டரில் ரசிகர் ஒருவர் சத்ரபதி சாம்பாஜி மகாராஜா போல் வேடம்அணிந்து குதிரையில் அமர்ந்து படம் பார்க்க வந்தார்.
போப்கான்…னே Allow பண்ணாத தியேட்டருக்குள் எப்படி குதிரையை அனுமதித்தார்கள் என்று ஆச்சரியத்துடன் ரசிகர்கள் நோக்க அவர் குதிரையுடன் நேராக ஸ்கிரீனுக்கு முன்னால் நின்று போஸ் கொடுக்க ரசிகர்களும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.