in

விடாமுயற்சி… யை பார்த்துவிட்டு… பிரிந்த மனைவியை பார்க்க ஓடிய ரசிகர்… கண்ணீருடன் பேட்டி

விடாமுயற்சி… யை பார்த்துவிட்டு… பிரிந்த மனைவியை பார்க்க ஓடிய ரசிகர்… கண்ணீருடன் பேட்டி

 

இரண்டு வருடங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, அஜித் குமாரை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்தது.

அவரது விடாமுயற்சி நேற்று பல இடங்களில் கொண்டாட்டங்களுடன் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. கணவன் மனைவி பாசப்பினைப்பினை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள விடாமுயற்சி பல தரப்பட்ட ரசிகர்களை ஈர்த்தது.

அஜர்பைஜானில் ஒரு மோசமான குழுவால் தனது மனைவி கடத்தப்பட்ட பிறகு மீட்க போராடும் ஒரு மனிதனின் கதையே விடாமுயற்சி, இந்லையில் படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் விடாமுயற்சி தனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்று கூறினார்.

என் மனைவி என்னை விட்டு போய்விட்டாள் அவளை நான் போய் கூட்டி வர வேண்டும் அவள் ஏன் கோபப்பட்டு போனால் என்று தெரியவில்லை என்ன காரணத்தினால் என் மேல் அவளுக்கு கோபம் என்றும் தெரியவில்லை என்ன காரணமாக இருந்தாலும் சரி நான் என் மனைவியை தேடி போகிறேன் விடாமுயற்சி பார்த்த பிறகு என் மனைவியின் மேல் எனக்கு அளவு கடந்த பாசம் வந்துவிட்டது மனைவியின் மேல் பாசமாகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்பதை இந்த படம் கூறி இருக்கிறது.

யாரும் மனைவியை கொடுமைப்படுத்தி பார்க்காதீர்கள் என் மனைவியை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன் மனைவி உங்களை விட்டு எங்காவது சென்றிருந்தால் போய் தேடுங்கள், ஒரே ஒரு காரை வச்சிக்கிட்டு த்ரிஷாவை எங்கெங்கோ போய் தேடுகிறார் அஜீத் நீங்களும் அதே போல் உங்கள் மனைவியை போய் தேடுங்கள் என்று ரசிகர் ஒருவர் கண்ணீருடன் வேண்டுகோள் வைத்தார் .

What do you think?

மௌனராகம் 2 சல்மானுல் ஃபாரிஸ் விரைவில் திருமணம்

விடாமுயற்சி ….டப்பிங் படம் பார்க்கும் பீல்