in

முசிறி அருகே பாலப்பட்டி கிராமத்தில் நில தகராறில் விவசாயி வெட்டி கொடூர கொலை

முசிறி அருகே பாலப்பட்டி கிராமத்தில் நில தகராறில் விவசாயி வெட்டி கொடூர கொலை

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா சுக்காம்பட்டி ஊராட்சி பாலப்பட்டியைச் சேர்ந்தவர் பேரான் மகன் பழனிச்சாமி ( 55 ) அதே ஊரைச் சேர்ந்தவர் உத்தண்டன் மகன் அழகேசன் ( 50). இவர்கள் இருவருக்கும் சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பழனிச்சாமிக்கு சொந்தமான ஒரு மரத்தை அழகேசன் வெட்டியதாக தெரிகிறது.

இன்று அழகேசன் தனது நிலத்தில் உழவு செய்து கொண்டிருந்த போது பழனிச்சாமி அங்கு சென்று எனக்கு சொந்தமான மரத்தை ஏன் வெட்டினாய்? என கேட்டுள்ளார். இருவருக்கும் வாய் தகராறு முற்றி சண்டை ஏற்பட்டுள்ளது. அழகேசன் மற்றும் அவரது தந்தை உத்தண்டன் இருவரும் பழனிச்சாமியை விரட்டி சென்று அரிவாளால் வெட்டியும் ,கட்டையால் தாக்கியும் உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த முசிறி காவல் ஆய்வாளர் கதிரேசன் மற்றும் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கில் தொடர்புடைய அழகேசன் மற்றும் அவரது தந்தை உத்தண்டன் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

திருச்சியில் தனியார் பள்ளி வாகனங்கள் மோதி விபத்து – மாணவ, மாணவிகள், ஆசிரியர் ஓட்டுநர் உள்ளிட்ட 10 பேர் படுகாயம்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் போராட்டங்கள், தி.மு.க.,அரசின் மடை மாற்றும் செயல்,’’ என்று பா.ஜ., கட்சியின் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.