in

பாபநாசம் அருகே 50 ஏக்கருக்கு மேலாக புதியரக கரும்பு சாகுபடி செய்து வரும் விவசாயி …..

பாபநாசம் அருகே 50 ஏக்கருக்கு மேலாக புதியரக கரும்பு சாகுபடி செய்து வரும் விவசாயி …..

 

தமிழக அரசு ஒரு டன் கரும்புக்கு கூடுதலாக 5,000 வழங்க வேண்டும் எனவும், சர்க்கரை ஆலைகளில் வெட்டு கூலி 50 சதவீதம் ஆலையே ஏற்க வேண்டும் எனவும் கரும்பு விவசாயிகள் கோரிக்கை…..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ஓலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அமலதாஸ் (வயது 63 ) இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இவருக்கு விஜயபாரதி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
இவர் சிறு வயதிலிருந்து தன் தந்தையுடன் விவசாயத்தில் ஆர்வமாக இருந்ததால் 3 தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் தன் தந்தை இறந்த பிறகு முழுமையாக கரும்பு சாகுபடி விவசாயத்தில் 50 ஏக்கருக்கு மேலாக சாகுபடி செய்து வருகிறார்.

இந்நிலையில் கரும்பு விதைகளில் புதியரக கரும்பு ரகங்களை வெளியூர் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் இறக்குமதி செய்து கரும்பு சாகுபடி விவசாயம் செய்து வருகிறார்.

மேலும் ஆட்கள் பற்றாக்குறையால் உயர்ரக இயந்திரங்கள் மூலம் கரும்பை வெட்டி கரும்பு ஆலைகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதால் கரும்பு விவசாயத்தில் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

 

இந்நிலையில் தமிழக அரசு உடனடியாக கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கும் நிர்ணய தொகையை கூடுதலாக ரூ.5,000 வழங்க வேண்டும் எனவும், சக்கரை ஆலை நிர்வாகம் வெட்டுக்கூலியில் 50 சதவீதம் ஆலய ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளார்.

What do you think?

பாபநாசம் அருகே ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்….

 சிபிஐ எம் எல் கட்சியினர் பல்வேறு பொறுப்புகள் வலியுறுத்தி திடீர் சாலை மறியல்