விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாலிபேக் நிறுவனத்தில் தீ விபத்து
தரைமட்டமான கட்டிடம்
சிவகாசி நேஷனல் காலணியில் பாலி பேக் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.
சிவகாசி ஞானகிரி சாலையைச் சேர்ந்தவர் சந்திரமகாலிங்கம். இவர் நேஷனல் காலனியில் உள்ள விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து பாலி பேக் அட்டை லேமினேஷன் உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார்.அந்த நிறுவனத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் பாலிபேக் நிறுவனத்தில் கெமிக்கல் பொருட்கள் வைத்திருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் வெடித்ததால் கட்டிடம் தரைமட்டமானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாலில் பேக் நிறுவன உரிமையாளர் சந்தன மகாலிங்கத்திடம் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் கட்டிட பாகங்கள் பட்டு அருகே இருந்த பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது, கட்டிடத்தில் இருந்த என்ன வகையான கெமிக்கல் பொருட்கள் இருந்தது என்பது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.