in

நெல்லின் ஈரப்பதம் குறித்து நான்கு பேர் கொண்ட மத்திய குழுவினர்‌ ஆய்வு.

நெல்லின் ஈரப்பதம் குறித்து நான்கு பேர் கொண்ட மத்திய குழுவினர்‌ ஆய்வு.

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பருவம்‌ தவறி பெய்த கனமழை மற்றும் அதிக பனி பொழிவு காரணமாக சம்பா – தாளடி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் நெல்லின் ஈரப்பதம் கடுமையாக அதிகரித்தது.

இந்த நிலையில் விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் நெல் கொள்முதல் செய்து வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17% ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த ஈரப்பதத்தை 17%லிருந்து உயர்த்தி 22% வரை உயர்த்த வேண்டும் என டெல்டா விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசிடம் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது. அதன் தொடர்ச்சியாக நெல்லின் ஈரப்பதம் உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசின் சேமிப்பு மற்றும் ஆய்வு உதவி இயக்குநர்கள் நவீன், ப்ரீத்தி மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் அபிஷேக், ராகுல் ஆகிய நான்கு பேர் கொண்ட மத்திய குழுவினர் தமிழ்நாடு வாணிப கழக இயக்குநர் அண்ணாதுரை தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரை பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

இரண்டு நாட்கள் ஆய்விற்கு பிறகுதான் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் நெல்லின் ஈரப்பதம் உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

Sk 25 படத்திற்கு இது தான் டைட்டில்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தியது பி. தங்கமணி.பேச்சு.