in ,

மலேசிய நாட்டில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் பிரம்மாண்டமான செம்பிலான வேல்

மலேசிய நாட்டில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் பிரம்மாண்டமான செம்பிலான வேல்

 

கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் தயாரிக்கப்பட்டு மலேசிய நாட்டில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் பிரம்மாண்டமான செம்பிலான வேல்.

மலேசிய நாட்டில் கி லாங் என்ற இடத்தில் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது .

இந்த ஆலயத்தில் கொடி மரம் போல் வேல் அமைக்கப்பட உள்ளது.

அதற்காக கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டறையில் 15 அடி உயரமும் 275 கிலோ எடையில் இந்த வேல் தயாரிப்பதற்கு ஆர்டர் வழங்கப்பட்டது .

20 தொழிலாளர்கள் உழைப்பில் சுமார் ஒரு வருட காலமாக தயாரிக்கப்பட்ட இந்த வேல் வேல் தற்பொழுது முழுமை பெற்றுள்ளது .

இந்த மாத இறுதியில் இந்த வேல் மலேசியா நாட்டிற்கு அனுப்பி வைக்க உள்ளது.

13 பகுதிகளாக அமைக்கப்பட்ட இந்த வேலின் தலைப்பு பகுதி மட்டும் சுமார் 6 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

What do you think?

ஐப்பசிமாத உத்திர நட்சத்திரத்தை ஐய்யப்ப சுவாமிக்கு சிறப்புஅபிஷேக அலங்கார ஆராதனைகள்

ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வாா் திருக்கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்