ஆண்டுக்கு மூன்று லட்சம் பணம் விதைகள் விதைக்க இலக்கு – ஓய்வு பெற்ற பெல் உதவி பொது மேலாளரின் முயற்சி…
திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் உள்ள குளக்கரையில் 1000 பனை விதைகள் விதைக்கும் பணிகள் நடைபெற்றது.
இயற்கையை பாதுகாக்கும் பொருட்டு பனை மரத்தின் பயன்களை அறிந்த சமூக ஆர்வலர்கள் இயற்கை ஆர்வலர்கள் ஆங்காங்கே உள்ள குளங்கள் மற்றும் ஏரி கரை பகுதிகளில் பனைவிதைகளை விதைத்து அதனை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் துவாக்குடி ரிங் ரோடு அருகே உள்ள எலந்தப்பட்டி குளக்கரையில் மண்ணும் மரமும் இயக்கம் சார்பில் ஆயிரம் பனை விதைகள் நடும் பணியானது இரண்டு நாட்களாக நடைபெற்றது.
ஓய்வு பெற்ற பெல் உதவி பொது மேலாளரும், மண்ணும் மரமும் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான ராஜூ தலைமையில் சமூக ஆர்வலர்கள் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் குளக்கரை பகுதிகளில் பனை விதைகளை விதைத்தனர்.
இதுவரை 15 லட்சத்திற்கு மேலான பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டுக்கு மூன்று லட்சம் பனை விதைகள் விதைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், மண்ணும் மரமும் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜு தெரிவித்தார்.