அமெரிக்காவில் உள்ள கோவிலுக்கு கோவில் நகரமான காஞ்சியில் 75 நாட்களில் தயாரிக்கப்பட்ட தங்க ரதம்
நான்கு டன் எடையும் 21 அடி உயரம் கொண்ட தங்கரதம் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தயாரிப்பு
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ராஜா ஆன்மீக நிறுவனம் சார்பில் ஆன்மீகம் தொடர்பான பொருட்கள் தயார் செய்து கோவில் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
இந்நிலையில் அமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் மாகாணத்தில் சியாடலில் உள்ள வேதா கோவிலுக்கான தங்க ரதம் ஆர்டர் பெறப்பட்டது
அதன்படி 23 அடி உயரத்தில் 4 டன் எடையில் இரும்பு மற்றும் தாமிர உலோகத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தங்க ரதம் 75 நாட்களில் செய்து முடிக்கப்பட்டது
35 டிகிரி திரும்பும் அளவிற்கும் நவீன தொழில்நுட்பத்துடன் தயார் செய்யப்பட்ட இந்த ரதமானது ஒரே இடத்தில் நிற்காமல் 6 பாகங்களாக பிரித்தும் வைக்கும் அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது
மேலும் சிவ விஷ்ணு என எந்த கடவுளுக்கும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த தங்கரதத்தின் மதிப்பு 1.25 கோடி ரூபாய் ஆகும்
இன்று தயாரித்து முடிக்கப்பட்ட இந்த தங்க ரதமானது 6 பாகங்களாக பிரிக்கப்பட்டு விமானம் மூலம் அமெரிக்கா சென்றடையவுள்ளது