in

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பு..!

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பு..!

 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் அவரது நினைவிடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவரின் திரு உருவ சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் வரும் அக்டோபர் 30 தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழாவும் 62_வது குருபூஜை விழாவும் கொண்டாடப்படவுள்ளது. விழாவானது 3 நாட்களாக நடைபெறும் அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவாகவும் 29ஆம் தேதி அரசியல் விழாவாகவும் 30ஆம் தேதி அரசு விழாவாகவும் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி கடந்த 2014ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அதிமுக சார்பாக முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு 13.7 கிலோ எடையுள்ள தங்கத்தினால் ஆன கவசம் அணிவிக்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஓ பன்னீர்செல்வம் அவர்களால் வழங்கப்பட்ட 11 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசம் அகற்றப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வின் போது பொதுமக்களின் பார்வைக்கு அணிவிக்க பட்டு பின்னர் மதுரை அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் வைக்கபடும்.

அதேபோல் இந்த ஆண்டும் தங்க கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கிப் பெட்டகத்திலிருந்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவலய பொறுப்பாளர் காந்திமீனாள் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் , ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன் மற்றும் நினைவாலய பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் தேவர் நினைவிடத்தில் தங்ககவசம் ஒருவாரம் அணிவிக்க பட்டு அடுத்த வாரம் மதுரை வங்கி லாக்கருக்கு கொண்டு செல்லப்படும். தங்க கவசத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

What do you think?

சாமி கும்பிட அரசு வாகனத்தை பயன்படுத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மாவட்ட பொறியாளர்கள்

அவதூறுகளை பற்றி எனக்கு கவலை இல்லை…ஜெயம்ரவி