in

காயலான் கடை போல் காட்சியளிக்கும் அரசு பொது மருத்துவமனை


Watch – YouTube Click

காயலான் கடை போல் காட்சியளிக்கும் அரசு பொது மருத்துவமனை

 

காயலான் கடை போல் காட்சியளிக்கும் அரசு பொது மருத்துவமனை ஆண்கள் பிரிவு வீடியோ வெளியாகி பரபரப்பு. மருத்துவக் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீ ராமுலு தகவல்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால், யானம், மாஹி ஆகிய 4 பிராந்தியமாக உள்ளது. இதில் புதுச்சேரி பிராந்தியத்தில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உள்ளது. இதற்கு ஒரே ஒரு அரசு பொது மருத்துவமனை மட்டுமே உள்ளது.

இந்த அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு குறைபாடுகளும் படுக்கை வசதிகளும் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான தேவையான உபகரணங்களும் இல்லாத சூழ்நிலை உள்ளது.

இது கடந்த 10 வருட காலமாக சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் இதற்கு கடந்த துணைநிலை ஆளுநராக இருந்த கிரன்பேடி மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் அவ்வப்போது ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்து சென்றனர்.

ஆனால் இதுவரைக்கும் அரசு பொது மருத்துவமனை மேம்படுத்துவோம் இல்லை இதனால் வரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் தான் அவ்வப்போது அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் குறைபாடுகள் உள்ளது என பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்தது உள்ளனர்.

இருந்த வீடியோக்களை அரசு சுகாதார இயக்குனருக்கும் மற்றும் முதலமைச்சரிடம் இந்த தகவலை தெரிவித்தும் ஆய்வு மட்டுமே நடத்தி வந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை..

இப்படி இருக்கும் சூழ்நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தனி கிடங்கு இல்லாத காரணத்தினால் ஆண்கள் சிகிச்சை பிரிவுகள் மருத்துவமனைக்கு தேவையான பொருட்கள் பழைய பொருட்களை ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு விற்கும் காயலான் கடை போல் காட்சி அளிக்கிறது. இதனை வீடியோ எடுத்த பின்னணி குரலுடன் பதிவிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது…

இது குறித்து சுகாதார இயக்குனரிடம் கேட்டபோது மருத்துவ கண்காணிப்பாளர்கள் இது குறித்து காலையில் விசாரணை செய்ததாகவும் உடனடியாக பழைய பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளதாகவும் இதன் மீது உரிய அறிக்கை கேட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீ ராமுலு தெரிவித்துள்ளார்…


Watch – YouTube Click

What do you think?

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை

வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாரதனை