தென்னிந்திய நடிகர் நடிகைகள் இணைந்து நடத்தும் மாபெரும் கலை நிகழ்ச்சி
தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக விஷால் பொறுப்பேற்ற பிறகு நடிகர் சங்க கட்டிடத்தை கட்டியே ஆக வேண்டும் என்று தீர்மானித்து சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் 19 கிரவுண்ட் காலி மனையில் நாலு மாடுகளை கொண்ட புதிய கட்டிடம் தற்பொழுது உருவாகி வருகிறது. ஆயிரம் பேர் அமரும் அரங்கம், திருமண மண்டபம், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி அறை, எடிட்டிங் ,டப்பிங் தியேட்டர்கள் என ஏகப்பட்ட அறைகள் உள்ளன அறுபது சதவிதத்திற்கு மேல் பணிகள் முடிந்த நிலையில், கட்டிடப் பணிக்கு மேலும் நிதி தேவைப்படுவதால் நடிகர் நடிகைகள் இணைந்து கலை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த குறித்து ஆலோசனை மற்றும் நிதி கேட்டு சங்க பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிடோர். நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தனர். ரஜினிகாந்தும் கட்டிடப் பணிகள் குறித்து ஆர்வமாக கேட்டு விரைவில் நேரில் வந்து பணிகளை ஆய்வு செய்கிறேன் என்றும் வாக்குறுதி அளித்தார்.