சங்கரன்கோவிலில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி கற்ப்பதன் அவசியம் குறித்து உயர்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக மேடையில் இருந்த பெண் அதிகாரிகளை ரோல் மாடலாக சுட்டிகாட்டி மாவட்ட ஆட்சியர் பேச்சு…
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியானது மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பள்ளி கல்விதுறை, சமூக பாதுகாப்புதுறையை சேர்ந்த அதிகாரின் பல்வேறு கல்வி குறித்த விழிப்புணர்வையும்அதனால் கிடைக்கும் பயன்களையும் எடுத்துறைத்தனர். இதில் பல்வேறு பள்ளி, கல்லூரி, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட ஏரளமானோர் கலந்து கொண்டனர்…
நான்முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர். நான் கேரளாவை சேர்ந்தவன் மிகவும் கஷ்டப்பட்டு படித்ததனால்தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். என்னுடன் படித்தவர்கள் பலர் பல்வேறு வேலைகளை செய்து வருவதாக தெரிவிதார். தொடர்ந்து பேசிய போது இந்த பகுதியில் பெண்கள் +2 முடித்தவுடன் அனைவரையும் திருமணம் செய்து கொடுத்து வைக்கின்றனர்.
எனவே மேடையில் அமர்ந்து இருக்க கூடிய இரண்டு பெண் அதிகாரிகளுக்கும் திருமணமாகவில்லை எனவும் கஷ்டப்பட்டு படித்ததனால்தான் அவர்களால் இந்த நிலைமைக்கு வர முடிந்தது எனவும் இரண்டு கோட்டத்திற்கு அதிகாரிகளாக உள்ளனர் என்றும் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலரை சுட்டிக்காட்டி எனவே இந்த இருவரையும் ரோல்மாடலாக வைத்து கஷ்டப்பட்டு படித்து முன்னுக்கு வர வேண்டும். மேலும் நீங்கள் படிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் தயராக உள்ளோம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் பேசியது. அனைவரின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது….