ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவியின் உருக்கமான அறிக்கை
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவு எடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்ற செய்தி சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட இருவரும் தற்பொழுது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் நீண்ட யோசனை பிறகு எங்களது 11 வருட திருமண வாழ்கையை முடிவுக்கு கொண்டு வந்துஉள்ளோம் ஒருவருக்கொருவரின் உணர்விற்கு மரியாதை கொடுத்து , மன அமைதிக்காகவும் எங்களின் முன்னேற்றத்திற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
எங்களின் தனி உரிமையை புரிந்து கொண்டு மதிக்குமாறு ஊடகங்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் அன்புடன் வேண்டுகோள் விடுகிறோம்.
நாங்கள் பிரிவது சிறந்த முடிவு என்று நம்புகிறோம் இந்த கடினமான நேரத்தில் உங்களின் ஆதரவு தேவை என்பதையும் அறிவிக்கிறோம். இவர்களின் அறிக்கையின் மூலம் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி நிஜமாகவே பிரிந்து விட்டார்கள் என்று தெரிகிறது.