in

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பெரும் திருவிழா தேரோட்டம்

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பெரும் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பெரும் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கமாகும். இதற்காக கடந்த 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி,அங்குரார்ப்பணம் போன்றவை நடைபெற்றன.

தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதி சனிக்கிழமை காலை சுமார் 8.30 மணி அளவில் கோவிலின் பிரகாரத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கொடியேற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து காலை சூரிய பிரபையும், இரவு சந்திரபிரபையும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாள் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு மண்டகப் பணிகளை தொடர்ந்து அன்ன வாகனம் சிம்ம வாகனம் கேடயம் கருட வாகனம் சேஷ வாகனம் ஆஞ்சநேயர் வாகனம் யானை வாகனம் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்துருளி தேரோடும் வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சுமார் 7 மணி அளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து பூ பல்லக்கில் திருத்தம்பதியர் கோலத்தில் உலா வந்து அருள் பாலித்தார்.

தேரோட்டம்

நேற்று 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சௌந்தரராஜ பெருமாள் திருத்தேருக்கு புறப்பாடு நடைபெற்றது.. தொடர்ந்து மாலை 4 .30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக குழுவினரின் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. இந்தத் திருத்தோட்டத்தை மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் சுப்பிரமணியம் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, தொழில் அதிபர்கள் வேலுச்சாமி கவுண்டர் கந்தசாமி கவுண்டர்,ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி, துணைத்தலைவர் நாகப்பன்,அகரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜெயபால், தாடிக்கொம்பு பேரூர் கழக திமுக செயலாளர் ராமலிங்க சுவாமி, தாடிக்கொம்பு ஊர் நாட்டாமைகள், அருணா சேம்பர் உரிமையாளர் மணிகண்டன், சொர்ணம் ஹோண்டா உரிமையாளர் முருகேசன், அன்பு தேவர், பகவதி மட்டன் ஸ்டால் உரிமையாளர் பகவதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வாசுதேவன் சுசீலா கேப்டன் பிரபாகரன் ராமானுஜம் திருக்கோவில் செயல் அலுவலர் திருஞானசம்பந்தர் மற்றும் திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் ராஜப்பா,ராமமூர்த்தி உள்ளிட்ட பட்டாச்சாரியார்கள் செய்தனர்.

What do you think?

கருப்பசாமி ஆடி பூஜையை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரம்மாண்ட அன்னதானம் வழங்கப்பட்டது

நவகிரக கோயில்களில் பிரதானமாக விளங்கும் சூரியனார்கோயிலில் மகா அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜை