in

ரூபாய் 500 கோடியில் பிரம்மாண்டமாக திரைப்பட நகரம் உருவாக்கப்படும்… மகிழ்ச்சியில் திரை துறையினர்

ரூபாய் 500 கோடியில் பிரம்மாண்டமாக திரைப்பட நகரம் உருவாக்கப்படும்… மகிழ்ச்சியில் திரை துறையினர்

திரைத்துறையின் ஆசையை நிறைவேற்றிய தமிழக முதல்வர், அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் உள்ள பூந்தமல்லியில் ரூபாய் 500 கோடியில் பிரம்மாண்டமாக திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்று இன்றைய பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

அந்த காலத்தில் சினிமா ஷூட்டிங் எல்லாம் சென்னையில் மட்டும் தான் நடக்கும் ஆனால் ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டி பிரமாண்டமாக கட்டப்பட்டதை அடுத்து பெரும்பாலான சூட்டிகள் ஹைதராபாத்தில் தான் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இதுபோன்ற திரைப்பட நகரம் சென்னையில் உருவாக வேண்டும் என்று நடிகர் சங்கம் பல நாட்களாக கோரிக்கை வைத்தது அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ரூபாய் 140 கோடி அளவில் திரைப்பட நகரம் நிச்சயமாக உருவாக்கப்படும் என்று வாக்களித்தார்.

இந்நிலையில் இன்று வாசிக்கப்பட்ட பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்பட நகரம் அனைத்து நவீன வசதிகளுடன் அரசு தனியார் பங்களிப்புடன் விரைவில் உருவாக்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பிற்கு திரைத் துறையினர் மற்றும் நடிகர் சங்கம் தங்களது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.

What do you think?

பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் வேலை

மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்