மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம்
தை அமாவாசையை முன்னிட்டு புகழ்பெற்ற மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் அளித்து வழிபாடு.
தை அமாவாசையான இன்று தர்ப்பணம் அளிப்பதன் மூலம் குடும்பத்தில் மறைந்த ஏழு தலைமுறைகளுக்கு தர்ப்பணம் வழங்கப்படுவதாக ஐதீகம்.
புண்ணிய நதிகள் குளங்கள் கடற்கரைகளில் பக்தர்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து பலிகர்ம பூஜைகள் செய்வது வழக்கம், அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 16 தீர்த்த கிணறுகளுடன் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற காவிரி துலா கட்ட ரிஷப தீர்த்தம் விளங்குகிறது.
தை அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆற்றின் கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனர். தர்ப்பணம் செய்த பொருட்களை காவிரி ஆற்றில் கரைத்தனர்.