மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்பணம்
மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் அமைந்துள்ள புனித துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கான திதி கொடுத்து பலிகர்ம பூஜைகள் செய்து, பக்தர்கள் வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் நடுவே காவிரி ஆறு ஓடுகின்றது. காசிக்கு நிகரான ஆறு ஸ்தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்றாகும்.
ரிஷப தேவருக்கு ஏற்பட்ட செருக்கை அடக்க சிவபெருமான் அளித்த சாபம் நீங்க, ரிஷபதேவர், இங்கு காவிரியில் நீராடியதாக புராண வரலாறு கூறுகின்றது. இதனால், காவிரி துலாக்கட்டம், ரிஷப தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது.
இங்கு 16புண்ணிய தீர்த்தக்கிணறுகள் காவிரி ஆற்றின் உள்ளே அமைந்துள்ளது. இதனால், இங்கு நீராடுவது புண்ணியமானதாக கருதப்படுகின்றது. ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி உள்ளிட்ட காலங்களில் இங்கு நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமப்புறங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முன்னோர்களுக்கு திதி அளித்து வழிபாடு செய்தனர்.